சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,236 பேர் உயிர் இழந்து 8,08,571 பேர் குணம் அடைந்து தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,28,169 பேர் பாதிக்கப்பட்டு 4,053 பேர் உயிர் இழந்து 2,22,039 பேர் குணம் அடைந்து தற்போது 2,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,259 பேர் பாதிக்கப்பட்டு 661 பேர் உயிர் இழந்து 51,926 பேர் குணம் அடைந்து தற்போது 672 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,651 பேர் பாதிக்கப்பட்டு 750 பேர் உயிர் இழந்து 49,500 பேர் குணம் அடைந்து தற்போது 401 பேர் சிகிச்சையில் உள்ளனர்.