ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் காரணமாக, ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடம் பாதிக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் கல்லூரிகளை திறக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் இறுதியாண்டு மாணாக்கர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் வரும் 19ந்தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கத் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப்பள்கிள், இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்ரவரி 1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துபேசி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.