ரஜினி அரசியலுக்கு வந்தேயாக வேண்டுமென்று, நேற்று ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர், சென்னையில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல, இதுவும் நமது அருமையான(!) ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு பணிந்து, ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்றெல்லாம்கூட சிலர் எழுதினார்கள்.
ஆனால், இதெல்லாம் பாஜகவின் செட்டப் என்பதை விபரம் அறிந்தோர் புரிந்திருந்தனர். பாஜக விரித்த வலையிலிருந்து, ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை சிகிச்சையை சாக்காக வைத்து, எப்படியோ ஜகா வாங்கி தப்பித்தார் ரஜினிகாந்த்.
ஆனாலும், மனம் தளராத குருமூர்த்தி மற்றும் பாஜக வகையினர், ரஜினியின் அரசியல் வாய்ப்புகள் குறித்து ஏதேதோ கூறி வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் போராட்டம் என்ற பெயரில், அவர்களின் தூண்டுதல் பெயரில் ஒரு செட்அப் அரங்கேற்றப்பட்டது.
ஆனால், இது ரஜினியின் காதுகளுக்கு செல்லாமல் இருக்குமா? உடனே, ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டுவிட்டு, மீண்டும் வன்மையாக மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் மூலம், ரஜினியை வைத்து எப்படியேனும் ஒரு ‘கேம்’ ஆடிவிடலாம் என்ற பாஜகவின் கணக்கு இப்போதுவரை ஃபெயிலியர் ஆகித்தான் வருகிறது பாவம்..!