கோவிட் 19-ன் கோர பிடியில் உலகம் சிக்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த தொற்று நோயால், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி ஜனவரி 16-ம் தேதி முதல் இந்தியாவில் போடப்படுகிறது. இதில் முதலில் மூன்று கோடி சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் 1991 ஆம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்த நடிகை ஷில்பா ஷிரோட்கர் தனது கையில் ஊசி போட்டுக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“பாதுகாப்பான தடுப்புசி! நியூ நார்மல் 2021-க்கு வருகிறேன். நன்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்” என்றும் அந்த படத்துடன் குறிப்பிட்டுள்ளார். , துபாயில் தனது கணவர் அபரேஷ் ரஞ்சித் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவரது சகோதரி நம்ரதா ஷிரோட்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி.
https://www.instagram.com/p/CJtLSdllGyW/