டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர் விகிதம் அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்ந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8மணி நிலவரம்) 18,139 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,04,13,417-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 2,25,449 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 18-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
அதுபோல, நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 234 போ் உயிரிழந்தனா். இதனால், நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,570-ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 20,539 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,00,37,398-ஆக அதிகரித்ததுள்ளது.
நேற்று மாலை வரை (ஜனவரி 7-ஆம் தேதி) நாடு முழுவதும 17,93,36,364 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 9,35,369 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 96.30% ஆக உயர்ந்துள்ளது. அதுபோல உயிரிழப்போரின் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தெரிவித்துள்ளது.