சிட்னி: இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில், மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த டேவிட் வார்னர் மீண்டும் களம் காண்கிறார். அவருடன் மற்றொரு துவக்க வீரராக வில் புகோவ்ஸ்கி இணைகிறார். இவர் பயிற்சிப் போட்டியில், தலையில் பந்து தாக்கி காயமடைந்திருந்தார்.
மேலும், பந்துவீச்சாளர் ஷான் அபாட் அணியில் இணைகிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக செயல்பட்ட ஜோ பர்ன்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி விபரம்: டிம் பெய்ன் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், ஷான் அபாட், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், லாபுஷேன், நாதன் லேயான், மைக்கேல் நீஸர், ஜேம்ஸ் பட்டின்ஸன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், மைக்கேல் ஸ்வீப்ஸன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.