இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
#Day89 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/TE53t7ac1Q
— Vijay Television (@vijaytelevision) January 1, 2021
இந்நிலையில் இன்று இந்த வாரத்தின் மோசமான performerஐ தேர்வு செய்வதற்காக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலாஜிக்கு ஆரிக்கும் பெரிய அளவில் சண்டை வெடித்து இருக்கிறது. பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி அதற்கு முந்தைய வாரங்கள் நடந்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட பாலாஜி இந்த வாரத்தை பத்தி மட்டும் பேசுங்க என கூறினார்.
#Day89 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/tXELZBC3PG
— Vijay Television (@vijaytelevision) January 1, 2021
தற்போது இருவரும் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அங்கும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. ஒருவரை ஒருவர் தாக்கி வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய சோம்பேறித்தனபடுற நீ.. நீ என்ன எப்படி சொல்ல முடியும் என ஆரி கூற கோபித்து கொள்கிறார் பாலாஜி.
கூட்ட முடியாது முடியாது முடியாது.. இன்னொரு தடவ சோம்பேறினு சொன்னிங்க அவ்வளவு தான் என்று மல்லுக்கு நிற்காத குறையாக பாலாஜி சண்டை போடுகிறார்.