பெங்களூரு: கிட்டத்தட்ட ஒன்பதரை மாதங்கள் கழித்து, கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் பள்ளிகள், பியூசி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் மாணவர்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதுபோல் கிருமிநாசினி தெளித்தும், வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. மேலும் முகக்கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக அமைச்சர் எஸ். சுரேஷ்குமார், பள்ளிகள், பியூசி கல்லூரிகளுக்கு சென்று எடுக்கப்பட்டு உள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.