
டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு, மதுரையில் மாநாடு, தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரிக்கை என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை, ரசிகர்கள், மக்கள் என்னை மன்னியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல் இன்று மாலை ரஜினிகாந்தை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருக்கும் ரஜினியை அவர் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரஜினியிடம் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம்-ற்கு ஆதரவு கேட்பேன் என கமல் கூறியுள்ளார் .
Patrikai.com official YouTube Channel