தன்னுடைய சகோதரி ரம்யாவை பார்ப்பதற்காக துபாயில் இருந்து அவரின் தம்பி பரசு பாண்டியன் தன்னுடைய அம்மாவுடன் வந்திருந்தார். இந்த வாரம் வெளில போறது நீயாகவும் இருக்கலாம் என ரம்யாவுக்கு ஆறுதல் கூறினார் பரசு.இரண்டு பேரை இந்த வாரம் அனுப்பவும் செய்யலாம் என்றார்.

நேற்று ரியோவின் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் ரியோ கண்ணீர்விட்டு கொண்டே ஓடிச்சென்று அவரை கட்டிபிடித்து அழுதார்.

அடுத்து சோமின் சகோதரர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இவரும் அனைத்து போட்டியாளர்களிடமும் ஜாலியாகவே பேசிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், கேபியின் தாயார் வருகை காண்பிக்கப்பட்டுள்ளது. சமையல் செய்து கொண்டிருந்த கேபி, அம்மாவை பார்த்த மகிழ்ச்சியில் ஓடிச் சென்று கட்டி அணைத்தார். பிறகு அம்மாவிடம் புலம்பிய கேபி, இந்த வீட்டில் நான் எது செய்தாலும் என்னை பாராட்ட மாட்டார்கள். இங்கு அனைவரும் blind என வெளிப்படையாக பேசியுள்ளார்.

தற்போது ஆஜித்தின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் ஆஜித் கண்ணீர் விட்டு இருக்கிறார். அதன் பின் அனைவருடன் அமர்ந்து பேசும் போது இங்கு வந்து எத்தனை நாள் ஆகிறது. பேசவே மாட்டேங்குறான் என ஆஜித்தை செல்லமாக கண்டித்து இருக்கிறார்கள்.

அதே போல ஆஜித் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் அவருக்கு அதை யாரும் தெளிவாக புரியவைக்கவில்லை எனவும் ஆதங்கத்தை மற்ற போட்டியாளர்களிடம் வைக்கின்றனர். அதற்கு பதில் சொன்ன ஆரி, என் வாயை தான் அடைச்சிட்டாங்களே. அட்வைஸ் என சொல்லி. அவனிடம் பேசி தான் வாங்கிக்கட்டிக் கொண்டேன்’ என சொல்கிறார்.