ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. இந்த ஆண்டு முழுவதும் வலிமை படம் அப்டேட் கேட்டு சோர்த்து விட்டார்கள் தல அஜித் ரசிகர்கள்.
அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராமல் வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள்.
இந்நிலையில் அஜித் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர் .
Valimai திருவிழா ஆரம்பம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.