தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடன் கூறுவதில் வல்லவர் முத்தையா. முத்தைய்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டியன்’.
முத்தையா படங்களின் தலைப்பு எப்போதுமே முரட்டுத்தனமாக இருக்கும் பட்சத்தில் இத்திரைப்படத்திற்கு பேச்சி என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது படத்தின் டைட்டிலை ‘புலிக்குத்தி பாண்டியன்’ என மாற்றியுள்ளது படக்குழு.
லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நேரடியாக பொங்கலுக்கு (ஜனவரி 14) சன் டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘புலிக்குத்தி பாண்டி படத்தின் ’ ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் @dir_muthaiya இயக்கத்தில், @iamVikramPrabhu மற்றும் #LakshmiMenon நடிப்பில் "புலிக்குத்தி பாண்டி" படத்தின் First Look!#PulikkuthiPandi #SunTV #PKPFirstLook pic.twitter.com/nKSH31qgIX
— Sun TV (@SunTV) December 30, 2020