சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் 2021 மே மாதம் 22ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. முன்னதாக மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதையொட்டி, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. அதுபோல அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
பிப்ரவரி இறுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் வருகிறது. அதையொட்டி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், மார்ச் முதல்வாரத்தில்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel