
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ள நிலையில், மொத்தம் 192 ரன்கள் எதிரணியை விட பின்தங்கியுள்ளது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணியில் பஹீம் அஷ்ரப் அதிகபட்சமாக 91 ரன்களையும், முகமது ரிஸ்வான் 71 ரன்களையும் அடித்தனர். அபிட் அலி 25 ரன்களை அடித்தார். மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், நியூசிலாந்தைவிட 192 ரன்கள் பின்தங்கியுள்ளது.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், டிம் செளதி, டிரென்ட் போல்ட் மற்றும் நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Patrikai.com official YouTube Channel