இயக்குனர் சசி இயக்கிய ’பூ’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி .
இவர் தற்போது நடித்து முடித்துள்ள மலையாள படம் ’வர்த்தமானம்’. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை இது . இந்த படத்தில் பார்வதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மலையாள மாணவியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதை தேசிய விரோத நோக்கம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் இந்த படம் தடை செய்யப்பட வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர தணிக்கை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வகுப்புவாத ஒற்றுமையை இந்த படம் ஊக்குவிப்பதால் சான்றிதழ் தர மறுப்பதற்கான காரணத்தை சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.