டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,88,392 ஆக உயர்ந்து 1,47,379 பேர் மரணம் அடைந்து 97,39,382 பேர் குணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 22,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,01,69,818 ஆகி உள்ளது. நேற்று 251 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,47,379 ஆகி உள்ளது. நேற்று 23,184 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,39,382 ஆகி உள்ளது. தற்போது 2,80,274 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,854 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,16,236 ஆகி உள்ளது நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,189 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,526 பேர் குணமடைந்து மொத்தம் 18,07,824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,091 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 857 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,15,345 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 964 பேர் குணமடைந்து மொத்தம் 8,89,881 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,80,712 ஆகி உள்ளது இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 442 பேர் குணமடைந்து மொத்தம் 8,69,920 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,019 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,13,161 ஆகி உள்ளது இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,098 பேர் குணமடைந்து மொத்தம் 7,92,063 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 3,527 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,35,612 ஆகி உள்ளது இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,952 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,782 பேர் குணமடைந்து மொத்தம் 6,68,733 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 63,756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.