திருவனந்தபுரம்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் மாநில சட்டமன்றம் 24ந்தேதி கூடும் என அரசு அறிவித்த நிலையில், சட்டமன்றத்தை கூட்ட, ஆளுநர் அனுமதிக்கவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோர் கவர்னர் ஆரிப் முகமத்கானை சந்தித்து பேசினார்கள்.
மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்கள், மத்தியஅரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதுடன், மாநில சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.
அந்த வரிசையில், கேரள மாநில அரசும், டிசம்பர் 24ந்தேதி அன்று சிறப்பு சட்டமன்றத்தை கூட்டத்தை கூட்ட கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் மாநில அரசின் கோரிக்கையை ஏற்கன நிராகரித்துவிட்டார். இதனால் சிறப்பு கூட்டம் நடைபெறுவது தடைபட்டது.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோர் நேற்று கவர்னர் ஆரிப் முகமத்கானை சந்தித்து
சுமார் அரை மணி நேரம.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநில வேளாண் அமைச்சர் சுனில்குமார், ‘‘கவர்னர் இந்த முறை டிசம்பர் 31-ல் கூட்டம் நடத்துவது பற்றி நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புவதாகவும், அவர் பரிந்துரைத்த சில விஷயங்கள் பற்றி முதல்-மந்திரியுடன் விவாதிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
ஆனால் ஜனவரி 8-ல் தொடங்க வேண்டிய வழக்கமான சட்டசபை கூட்டத்தொடர் பற்றி கேட்டபோது அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
கவர்னரின் மறுப்பு மாநில அரசிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘கவர்னர் தற்போதும் சட்டசபை கூட்ட பரிந்துரையை நிராகரித்தால், பதவியில் இருந்து அவரை திரும்ப அழைப்பதற்கான கோரிக்கையில் சட்டசபை ஒன்று கூடும்’’ என்று எச்சரித்துள்ளனர்.