டெல்லி: ஃபைசர் பயோஎன்டெக்-கின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்து உள்ளது. அதுபோல சீரம் நிறுவனமும் விண்ணப்பித்து உள்ளது. இதுகுறித்து விரைவில் ஆய்வு செய்து அறிவிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
ஃபைசர் நிறுவனம் பயோஎன்டெக்குடன் என்ற ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா அந்நிறுவனத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியின் டோஸ் மருந்து வழங்க, சுமார் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் ஃபைசர் நிறுவனம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) கேட்டு முதன்முதலாக டிசம்பர் 5ந்தேதி விண்ணப்பித்து உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து தங்களது வாதங்களை டிசம்பர் 9ந்தேதி முன்வைக்க முடியாததால், மேலும் அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான (EUA) ஃபைசர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) விண்ணப்பித்து உள்ளன. இந்நிறுவனங்களின் விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்யும்வகையில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு விரைவில் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முதன்முதலில் விண்ணப்பித்தது பைசர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்நிறுவனத்தின் வல்லுநர்கள் பிஸியாக இருந்ததால், டிசம்பர் 9ம் தேதி தங்கள் வழக்கை முன்வைக்க முடியாததால்,நிபுணர் குழுவிடம் (எஸ்இசி) மேலும் அவகாசம் கோரியது.
இந்த நிலையில், ஃபைசரின் அவசரகால பயன்பாட்டு விண்ணப்பத்தை இந்தியா மதிப்பாய்வு செய்கிறது, தடுப்பூசி திட்டத்திற்கான விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.