கொரோனாவை போன்று புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இங்கிலாந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது. வரும் 31 ஆம் தேதி இந்த தடை அமலில் இருக்கும்.

மராத்தி மற்றும் போஜ்புரி சினிமா படப்பிடிப்புக்காக இரு படக்குழுவின் லண்டனில் தற்போது தங்கியுள்ளனர்.

இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடந்தி வந்த இந்த குழுவினர், இன்று முதல் 26 ஆம் தேதி வரை பலக்குழுக்களாக பிரிந்து இந்தியா வருவதற்கு டிக்கெட் எடுத்துள்ளனர்.

நேற்று முதல் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரு யூனிட்டிலும் உள்ள சுமார் 60 பேர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கட்ட ஊரடங்கு பிறக்கப்பட்டபோது வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

அப்போது ஜோர்டான் நாட்டுக்கு சென்ற ’’ஆடுஜீவிதம்’’ மலையாள சினிமா படப்பிடிப்பு குழு பல மாதங்கள் அங்கு தவிக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி