சென்னை: அதிமுக அரசு மீது ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடம் கொடுத்த திமுக தலைவர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீதான ஊழல் Part-1 தான் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் Part 2 இருக்கிறது. அதை மீண்டும் ஆளுநரை சந்தித்துக் கொடுப்போம் என தெரிவித்தார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று காலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து 97 பக்க அளவிலான ஊழல் புகார் பட்டியல் கொண்ட மனுவை வழங்கினார். அதில், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது. புகார் மனுமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
பின்னர், ஆளுநர் மாளிகை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதாவுவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியில் நான்கு வருடங்களில் எல்லா துறைகளிலும் ஊழல் விரிவடைந்து போயிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
அதிமுக அமைச்சர்களுடைய ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தி.மு.க கொடுத்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், மத்திய அரசு வழங்கி அரிசியை வெளி சந்தையில் விற்று அதில் ஒரு மாபெரும் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்த ஊழல் என இவையெல்லாம் ஆதாரத்துடன் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம்.