ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு  7,60,06,697 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 53,2275,632பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 60லட்சமாக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 லட்சத்து 99 ஆயிரத்து 116 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 61 பேருக்கும், பிரேசிலில் 52 ஆயிரத்து 385 பேருக்கும், ஜெர்மனியில் 31 ஆயிரத்து 553 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 889 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 52 ஆயிரத்து 140 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 5 கோடியே 32,75,632  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 லட்சத்து 81 ஆயிரத்து 75 பேருக்கும்  அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு:
அமெரிக்கா – 1,78,76,734
இந்தியா – 99,79,447
பிரேசில் – 71,63,912
ரஷியா – 27,91,220
பிரான்ஸ் – 24,42,990