அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டில், இந்திய அணி 244 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்தது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில், 233 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளில் எப்படியும் 300 ரன்களைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 11 ரன்களுக்கே, எந்தப் போராட்டமும் இல்லாமல், எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.

இந்திய அணியில், கேப்டன் கோலி அதிகபட்சமாக 74 ரன்கள‍ை அடிக்க, புஜாரா 43 ரன்களையும், ரஹானே 42 ரன்களையும் அடித்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். நாதன் லயன் மற்றும் ஹேசில்வுட் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.