டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,77,834 ஆக உயர்ந்து 1,44,829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 26,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 99,77,834 ஆகி உள்ளது.  நேற்று 342 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,44,829 ஆகி உள்ளது.  நேற்று 30,891 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,10,332 ஆகி உள்ளது.  தற்போது 3,10,332 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,880 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,84,773 ஆகி உள்ளது  நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,499 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,358 பேர் குணமடைந்து மொத்தம் 17,74,255 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,266 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,05,901 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,981 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,497 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,696 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 534 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,77,348 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,069 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 498 பேர் குணமடைந்து மொத்தம் 8,65,825 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,03,516 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,942 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,214 பேர் குணமடைந்து மொத்தம் 7,81,745 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,829 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,969 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,88,410 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,735 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,970 பேர் குணமடைந்து மொத்தம் 6,27,364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,163 பேர் சிகிச்சையில் உள்ளனர்.