பெர்ஹம்புர்: ஒடிசாவில் பள்ளி ஆசிரியருக்கு சொந்தமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
கஜபதி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவருக்கும், அவரது மனைவி, மகன் பெயர்களில் ரூ.4.03 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பரலகேமுண்டி பகுதியில் மட்டும் 8 இடங்களில் பல அடுக்கு மாடிகளும், நிலங்களும் அந்த ஆசிரியர் வாங்கி குவித்திருந்தது சோதனையில் தெரிய வந்தது. தவறான முறையில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், ஆசிரியருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறி உள்ளனர்.
முன்னதாக ஆசிரியரின் உறவினர்களுக்குச் சொந்தமான 12 வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது பள்ளி அலுவலக அறையிலும் சோதனை நடத்தினர்.