சென்னை:  கிண்டியில் உள்ள  சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இன்று மட்டும் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால் முழுமையாக தடுக்கப்படாத நிலையில்,  இறுதியாண்டு மாணவர்களுக்காக பள்ளி கல்லூரிகளும் திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உளளன. இதையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் விடுதிகளிலும் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணாக்கர்கள், ஊழியர்கள் என பலருக்கு தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம்  ஒரே நாளில் 87 மாணவர்கள் உட்பட 104 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று  79 மாணவர்களுக்குக்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுஇ  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  183 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 8 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

[youtube-feed feed=1]