சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள  அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், தற்போது 6 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள  நிலையில், மாணவர்கள் முக்வசம் அணிவதை தவிர்த்து வருவதால், மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ள நிலையில,   கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 550 பேருக்கு நடத்தப்பட்டுள்ள சோதனையில் 6 முதுநிலை மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக டீன் இனியன், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் இறுதியாண்டு மாணாக்கர்களுக்காF திறக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.