டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,908 ஆக உயர்ந்து 1,44,130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 26,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 99,32,908 ஆகி உள்ளது.  நேற்று 383 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,44,130 ஆகி உள்ளது.  நேற்று 33,853 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 94,55,793 ஆகி உள்ளது.  தற்போது 3,30,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,86,807 ஆகி உள்ளது  நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,339 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,395 பேர் குணமடைந்து மொத்தம் 17,66,010 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,185 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,03,425 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,594 பேர் குணமடைந்து மொத்தம் 8,75,796 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,645 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 500 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,76,336 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,064 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 563 பேர் குணமடைந்து மொத்தம் 8,64,612 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,132 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,01,161 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,919 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,210 பேர் குணமடைந்து மொத்தம் 7,79,291 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,951 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,77,256 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,066 பேர் குணமடைந்து மொத்தம் 5,16,666 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 57,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.