நாமக்கல்:

துரை மோட்டார் வாகன ஆய்வாளர் நாமக்கல் வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம், 30 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மேட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த். இவர், கடந்த 12ம் தேதி, விருதுநகர் அருகே காரில் சென்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு ரூ.1.43 லட்சத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில், வீட்டில் நேற்று அதிகாலை, போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்க ரூ.6.46 லட்சம், 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சப் பணத்தை பதுக்கவே, அவர் தனியாக வாடகைக்கு வீடு எடுத்துள்ளதாக தெரியவந்தது. இந்நிலையில், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகஆனந்த் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சண்முக ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியபோது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.