காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்பு பணிகளின் போது தங்க புதையல் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கோயில் புனரமைப்பின்போது, தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்கத்தை எடுத்துச் சென்ற கிராம மக்கள் அதை கொடுக்க மறுத்து வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உத்திரமேர் அருகே பழமையான குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயிலை முழுவதுமாக இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது மண்ணில் புதைந்திருந்த கருங்கல் படிக்கட்டை பெயர்த்து எடுக்கும்போது தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில் சில நகைகளை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து தங்கத்தை கேட்க சென்ற உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரத்திடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தங்கத்தை தராததையடுத்து அவர் திரும்பிச் சென்றார். கடந்த 16 ஆம் நூற்றாண்டு கால தங்கம் இது எனவும் கூறப்படுகிறது.