உத்திரபிதேசம்:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது.
அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக மாநிலத்துக்காக 10 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள மாநில சுதாரத்துறை செயலாளர் அமித் மோகன் இங்கு படிக்கும் மாணவர்கள் 10 ஆண்டுகள் மருத்துவ சேவையை உத்தரப் பிரதேசத்தில் செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் ரூ,1 கோடி செலுத்த வேண்டும். இதில் யாராவது பாதியிலேயே படிப்பை விட்டு செல்ல நினைத்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அடுத்த 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை படிக்க தடை விதிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.