அர்ச்சனா டீம் பாலாஜி டீமை கலாய்த்துக் கொண்டிருப்பது நேற்று முழுவதும் காட்டப்பட்டு இருந்தது. சண்டையும், சமாதானமும் ஒருபுறம் இருக்க பாலாஜி கண்ணீர் விட்டிருப்பது பார்த்து அனைவரும் ஷாக் ஆனார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஆரியின் கேம் எனக்கு பிடிக்கவில்லை என்று ரியோ ஆரம்பிக்கிறார். அதன் பிறகு வந்த ரமேஷ் மற்றும் ஆஜீத், அனிதாவின் ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது என கூறினார்கள். அதற்கு அனிதா அமைதியாக அதை ஏற்றுக்கொண்டார். பின் வந்த அர்ச்சனாவும் அனிதாவையே நாமினேட் செய்தார். காரணம் involvement குறைவாக இருந்தது என போட்டுடைத்தார். இதற்கு சரி ஒப்புக்கொள்கிறேன் என அனிதா கோபத்துடன் கூறுகிறார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், யாரும் கோர்த்து விடல அனிதா என்று நிஷா மற்றும் ரியோ விளக்குகிறார்கள். இது பர்சனல் ரீசன் கிடையாது, கேம் ரீசன் தான் என்று ஆரம்பிக்கிறார் அனிதா.