சென்னை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள செட்டிநாடு குழும அலுவலகம், வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரி சோதனை நடைற்று வருகின்றன.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் செட்டிநாடு குழுமத்தில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. செட்டிநாடு அரண்மனை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத்  உள்பட மற்ற பகுதிகளில் உள்ள  அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகள், குடியிருப்புகள் உள்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களிள்ல ரெய்டு நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இன்று செட்டிநாடு குழுமத்தில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.