சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தை, இந்திய அணி டிரா செய்தது.

மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இப்போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 247/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி, 306/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில், உமேஷ் மற்றும் சிராஜ், தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதன்பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, 189/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சஹா அரைசதம் அடித்தார்.

இந்நிலையில், 15 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி, 1 விக்கெட்டிற்கு 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.