பெங்களூரு: கர்நாடக தலைநகரில், வீடுகளை வாங்குவதற்காக முதலீடு செய்திருக்கும் 3.3 லட்சம் முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.
அதாவது, வீடுகளை வாங்கும் முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கர்நாடகா ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி வாக்குறுதி அளித்திருந்தாலும்கூட, அவர்களின் அச்சம் விலகவில்லை.
ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அறிக்கையின்படி, தற்போதைய நிலையில், மொத்தமாக 1100 புராஜெக்ட்டுகள் நிறைவுபெறாமல் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு சொத்தின் மதிப்பும் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் என்பதாக இருக்கும்.
மேலும், சொத்தின் மதிப்பில் 80% அளவிற்கான தொகையை மொத்தம் 3.3 முதலீட்டாளர்கள் செலுத்தியிருக்கிறார்கள். இது தோராயமாக ரூ.40 லட்சம் என்பதாக இருக்கும். இந்தவகையில், இத்திட்டத்தில் மட்டும் ஏராளமான கோடிகள் சிக்கியிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.