டெல்லி: 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
சென்னை, சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில், சென்னை, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பானையை 2019ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி ரத்து செய்தது.
மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களை 8 வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.