புனே: கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான ஸ்புட்னிக் V -ஐ, புனேயிலுள்ள மருத்துவமனை ஒன்றில், மொத்தம் 17தன்னார்வலர்கள் தங்களுக்குள் செலுத்திக் கொண்டனர்.

இந்தவகையில், தங்களுக்குள் மருந்து செலுத்திக்கொண்ட 17 தன்னார்வலர்களும், அடுத்த சில நாட்களுக்கு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்புட்னிக் V மருந்து, இந்தியாவில் மொத்தம் 100 தன்னார்வலர்களிடம் சோதித்துப் பார்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தொற்றுநோய் மற்றும் மைக்ரோபயாலஜிக்கான கமாலியா தேசிய ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்டதாகும் இந்த தடுப்பு மருந்து.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து, இந்தியா சார்பாக 100 மில்லியன் டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.