டில்லி
பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளது.
அகில இந்திய அளவில் அனைத்து மாநில மொழிகளிலும் தூர்தர்ஷன் சேவை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் பிரசார் பாரதி இந்த சேவைகளை நடத்தி வருகிறது.
மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியை மற்ற மாநிலங்கள் மீது திணிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு இந்த மொழி திணிப்பு காரணமாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரசார் பாரதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழி தூர்தர்ஷன் சேனலான பொதிகை உள்ளிட்ட அனைத்து மாநில தூர்தர்ஷன் சேனல்களிலும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பபட உள்ளது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.