சிட்னி: நேற்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரேன் பின்ச், ஒருநாள் அரங்கில் 5000 ரன்கள் என்ற சாதனையை எட்டினார்.
இவர், நேற்று அடித்தது அவரின் 17வது ஒருநாள் சதம் மற்றும் சிட்னி மைதானத்தில் அவரின் முதல் சதம். ஒருநாள் அரங்கில், விரைவாக 5000 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார் ஆரோன் பின்ச்.
மொத்தம் 126 இன்னிங்ஸ்கள் விளையாடி, இந்த 5000 ஒருநாள் ரன்கள் என்ற சாதனையை எட்டியுள்ளார் பின்ச். மொத்தம் 115 இன்னிங்ஸ்களில் இதை எட்டிய டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், மேத்யூ ஹைடன், மைக்கேல் பெவன் உள்ளிட்டோர் முறையே அடுத்த 3 இடங்களில் உள்ளனர்.