புதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற பெயர்கொண்ட தடுப்பு மருந்தின் விலை விபரம் வெளியாகியுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய போட்டிப் போடுவதால், அவற்றின் விலை தொடர்பாக சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான ஒரு மிகப்பெரிய உலகளாவிய மருந்து சந்தையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவைதான் அனைத்துமா? என்ற விமர்சனங்கள்கூட எழுந்துள்ளன.
இந்தியாவில், பரவலாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஆஸ்ட்ராஸெனகா என்ற தடுப்பு மருந்து, நம் நாட்டில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து, இந்திய மதிப்பில் ரூ.1750க்கு விற்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, உலக மதிப்பில் 20 டாலர்கள் விலைக்கு அது விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது.