டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,21,998 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 44,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 92,21,998 ஆகி உள்ளது.  நேற்று 489 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,34,743 ஆகி உள்ளது.  நேற்று 37,768 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,41,404 ஆகி உள்ளது.  தற்போது 4,43,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,439 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,89,800 ஆகி உள்ளது  நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,683 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,086 பேர் குணமடைந்து மொத்தம் 16,58,879  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 83,221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,870 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,76,425 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,495 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,949 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,475 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,612 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1085 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,63,843 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,956 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,447 பேர் குணமடைந்து மொத்தம் 8,43,863 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,024 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,557 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,73,176 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,639 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,910 பேர் குணமடைந்து மொத்தம் 7,49,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,875 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,420 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,71,873 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,096 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,349 பேர் குணமடைந்து மொத்தம் 5,05,238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.