டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 37,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 91,77,722 ஆகி உள்ளது. நேற்று 481 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,34,254 ஆகி உள்ளது. நேற்று 42,131 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,03,575 ஆகி உள்ளது. தற்போது 4,37,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,153 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,84,361 ஆகி உள்ளது நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,729 பேர் குணமடைந்து மொத்தம் 16,54,793 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 81,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,74,555 ஆகி உள்ளது இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,678 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,645 பேர் குணமடைந்து மொத்தம் 8,38,150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 545 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,62,758 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,948 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,390 பேர் குணமடைந்து மொத்தம் 8,42,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,71,619 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,622 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,904 பேர் குணமடைந்து மொத்தம் 7,47,752 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 3,757 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,66,453 ஆகி உள்ளது இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,072 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,425 பேர் குணமடைந்து மொத்தம் 5,00,089 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 64,174 பேர் சிகிச்சையில் உள்ளனர்.