லண்டன்: ஏடிபி பைனல்ஸ் ஆண்கள் டென்னிஸ் தொடரின் மற்றொரு அரையிறுதியில், உலகின் நம்பர் 2 வீரர் ரஃபேல் நாடல் தோற்றுப்போனார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதியில், ரஷ்யாவின் மெட்வதேவை எதிர்த்து ஆடினார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல்.
இதில் வென்று இறுதிக்கு தகுதிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செட்டில் 3-6 என்று தோற்ற நிலையில், இரண்டாவது செட்டை வென்றார். ஆனால், வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் தோற்றார்.
இறுதியில், 3-6, 7-6, 6-3 என்ற கணக்கில் போட்டியை இழந்து, அரையிறுதியுடன் வெளியேறினார் நாடல்.
இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் முதல் அரையிறுதியில், ஆஸ்திரிய வீரர் தியமிடம், உலக நம்பர் 1 வீரர் ஜோகோவிக் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், டொமினிக் தியம் மற்றும் மெட்வதேவ் மோதுகின்றனர்.