டில்லி
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து கண்டறியப்படாததால் பரிசோதனை, தனிமைப்படுத்தல் முக்கிய இடம் வகிக்கின்றது.
எனவே கொரோனா பரிசோதனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதுவரை 13,17,33,134 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10,75,326 பரிசோதனைகள் நடந்துள்ளன.
தமிழகத்தில் நேற்று 69,190 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,14,70,422 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Patrikai.com official YouTube Channel