லண்டன்: ஆண்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின், ஒன்றையர் பிரிவில், உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக்கை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தியம்.
இத்தொடரில், இவர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது இது இரண்டாவது முறையாகும்.
தற்போதைய நிலையில், உலகத் தரவரிசையில் நம்பர் 3 இடத்தில் இருக்கிறார் ஆஸ்திரிய நாட்டின் தியம். அரையிறுதிப் போட்டியில், முதல் செட்டில் வென்ற தியம், இரண்டாவது செட்டை இழந்தார். பின்னர், மூன்றாவது செட்டை போராடி வென்றார்.
இறுதியில், 7-5, 7-6, 7-6 என்ற கணக்கில், ஆட்டம் தியம் வசமானது. இப்போட்டி, மொத்தம் இரண்டு மணிநேரங்கள் 54 நிமிடங்கள் நீடித்தது.