திருமயம்: கவிஞரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன் கார் மோதியதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர் கடந்த 15ஆம் தேதி திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் ஓட்டி வந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் அருகே ஆலமரத்து குடியிருப்பைச் சேர்ந்த அருண்பாண்டி(28) என்ற இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து திருமயம் போலீஸார், சினேகன் மீது 2 பிரிவுகளில்வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.