பாட்னா :

பீகார் மாநிலத்தில் உயர் ஜாதியினரால், ஒடுக்கப்பட்ட பெண்கள், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்படுவது சர்வ சாதாரணமான விஷயம்.

அங்குள்ள தர்பங்கா மாவட்டத்தில் அண்மையில் இது போன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.

உத்தேச படம்

அந்த மாவட்டத்தில் உள்ள ஆதர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் வேற்று சமூகத்து பெண்ணை காதலித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இளைஞரும், அந்த பெண்ணும் ஊரை விட்டு ஓடிச்சென்று விட்டனர்.

டெல்லி சென்ற காதல் ஜோடி அங்கு திருமணம் செய்துள்ளனர். தங்கள் கல்யாண புகைப்படத்தை அந்த இளைஞர் தனது நண்பர்களுக்கு செல்போனில் அனுப்பினார்.

இதனை பார்த்த இளைஞரின் உறவினர்கள் இருபது பேர் ஆத்திரம் அடைந்து, அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை ஊர் பொது மைதானத்துக்கு இழுத்து வந்து மொட்டை அடித்தனர். அதோடு விடாமல் அவரை நிர்வாணமாக்கி, அந்த கோலத்தில் ஊர்வலமாக வீதியில் அடித்து உதைத்து இழுத்து சென்றுள்ளனர்.

மனதை பதை பதைக்க செய்யும் இந்த காட்சியை யாரோ செல்போனில் படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதால், அந்த கிராமத்துக்கு சென்று போலீசார் விசாரித்த போது, நடந்த சம்வங்கள் தெரிய வந்தன.

இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரார் தாக்கியதால் படுகாயம் அடைந்த பெண் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

– பா. பாரதி