சென்னை: சமையல் கேஸ் சிலிண்டருக்கான பணத்தை, ஆன்லைனில் செலுத்துவது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், சமையல் சிலிண்டர்களுக்காக, ஆன்லைனில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் மொத்தமாக 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள், ஏஜென்சிகளின் மூலமாக சமையல் சிலிண்டர்களைப் பெறுகிறார்கள்.

இந்நிலையில், சமையல் சிலிண்டர்களைப் பெறுவதற்கு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவற்கான வசதியையும் துவக்கியுள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். எனவே, அந்த வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர்களில், 12% பேர் டிஜிட்டலில் பணம் செலுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 17.4% என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.