ஐதராபாத்: இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, இணையதள தொடர்(வெப் சீரிஸ்) ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 34 வயதாகும் சானியா மிர்ஸா, ஒற்றையர் மகளிர் டென்னிஸில், இந்தியாவின் முகமாக இருந்தவர். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையர் போட்டியில் 3 கோப்பைகளும், கலப்பு இரட்டையர் போட்டியில் 3 கோப்பைகளும் இதுவரை வென்றுள்ளார்.

இந்நிலையில், காசநோய் விழிப்புணர்வு தொடர்பாக எடுக்கப்படும் ஒரு இணையதள தொடரில் இவர் நடிக்கவுள்ளார். ‘எம்டிவி நிஷேத் அலோன் டுகெதர்’ என்ற நிகழ்ச்சிக்காக இத்தொடர் எடுக்கப்படுகிறது.

“இன்று 30 வயதுக்கு உட்பட்டோர்கூட, காசநோய்க்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்தியாவில், இதன் தொற்று அதிகரித்து வருகிறது. எனவேதான், இத்தொடரில் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுசெய்தேன்” என்றுள்ளார் சானியா.