டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,58,143 ஆக உயர்ந்து 1,31,618 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 45,369 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 89,58,143 ஆகி உள்ளது. நேற்று 586 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,31,618 ஆகி உள்ளது. நேற்று 48,675 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 83,81,770 ஆகி உள்ளது. தற்போது 4,42,739 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,011 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,57,520 ஆகி உள்ளது நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,202 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,608 பேர் குணமடைந்து மொத்தம் 16,30,111 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 80,221 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,791 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,65,931 ஆகி உள்ளது இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,947 பேர் குணமடைந்து மொத்தம் 8,29,188 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,146 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1236 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,57,395 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,696 பேர் குணமடைந்து மொத்தம் 8,33,980 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,516 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,714 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,63,282 ஆகி உள்ளது இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,531 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,311 பேர் குணமடைந்து மொத்தம் 7,37,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,419 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,39,920 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,943 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,066 பேர் குணமடைந்து மொத்தம் 4,68,640 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.