
சிட்னி: எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸிடம் உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி. இவர், ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கேப்டனாக இருந்த டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர்.
அவர் கூறியுள்ளதாவது, “டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த கடந்த 2 சீசன்களில், அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் ஷ்ரேயாஸ். சக வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார் இவர்.
தனிப்பட்ட சாதனைகளைவிட, அணியின் வெற்றிக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். இளம் வீரராக இருக்கும் இவர், அதிக விஷயங்களை விருப்பத்துடன் கற்றுக்கொள்கிறார். மேலும், ஒரு நல்ல மனிதராகவும் இருக்கிறார்.
ஒரு பேட்ஸ்மேனாக, அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறார். எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கும் இவர், டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்னாக செயல்படும் தகுதியும் வாய்ப்பும் இவருக்கு உள்ளது” என்றுள்ளார் அலெக்ஸ் கேரி.
[youtube-feed feed=1]